அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீர்சோதனை: ஆவணங்கள் சிக்குமா?

மலேசியாவின் கோலாலம்பூர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்நாட்டுக்கு காவல்துறையினர் திடீர் சோதனை ஒன்றினை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த திடீர் சோதனை நடத்தப்பட்ட கோலாலம்பூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் உறவினர்கள் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லும் நோக்கத்தில் அரச ஆவணங்கள் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனப் புதிய அரசாங்கம் சந்தேகித்ததன் பேரிலேயே நேற்று இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மீது, மாநில முதலீட்டு நிதியில் (1MDB)பல பில்லியன் டொலர்கள் ஊழல் செய்துள்ளதாக தவறான குற்றச்சாட்டுகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நஜிப் ரசாக்கின் மனைவி ரொஸ்மா மன்சொர் ஒரு அரசாங்க வாகனத்தில் அதிகளவிலான பெட்டிகளையும் பொதிகளையும் குறித்த சோதனை நடத்தப்பட்ட குடியிருப்பிற்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வந்த நிலையில் இந்த திடீர்சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

நஜிப் ரசாக்கின் BN கூட்டணியின் தேர்தல் தோல்விக்குப் பின்புலமாக இருக்கும் 1MDB ஊழலில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென நஜிப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.