புற்றுநோய் செல்களை அழிக்க! தினமும் காலையில் சாப்பிடவும்…

கோடைக்காலத்தில் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் ஆபத்தை உண்டாக்குபவை என்பதால், வெளியே செல்லும் போது, தவறாமல் துணியால் தலையையும், கை மற்றும் கால்களுக்கு க்ளவுஸ், சாக்ஸ் போன்றவற்றை அணிந்து செல்லுங்கள்.

இதனால் புறஊதாக் கதிர்களின் நேரடி தாக்கத்தைத் தவிர்க்கலாம். சரும செல்களைத் தாக்கும் ஒரு வகையான புற்றுநோய் தான் சரும புற்றுநோய்.

எப்போது அசாதாரண வளர்ச்சி கொண்ட செல்கள் சரும செல்களுடன் காணப்படுகிறதோ, அது தான் சரும புற்றுநோய் ஆகும்.

சரும புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும்.

பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எப்போது ஒருவரது சருமத்தின் மீது அதிகளவு சூரியக்கதிர்கள் மற்றும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் படுகிறதோ, அவருக்கு சரும புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சரும புற்றுநோய் வராமல் தடுக்க காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுங்கள். காலை உணவு மிகவும் முக்கியமானது. இதை ஒருபோதும் தவறக்கூடாது.

காலை உணவைத் தவிர்த்தால் அல்லது ஆரோக்கியமற்ற காலை உணவுகளான மஃபின்கள், செரில்கள், சமோசா, இனிப்புக்கள் போன்றவற்றை உட்கொள்ளலால், உடல் ஆரோக்கியம் தான் மோசமாக பாதிக்கப்படும்.

அதிகப்படியான சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்றவை சரும செல்களுக்கு நல்லதல்ல. ஆரோக்கியமான உணவுகளான ஓட்ஸ் போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.

முக்கியமாக சருமத்திற்கு அடியில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.