கைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்..!!! வீடியோ காட்சி!!

கைகுழந்யதையுடன் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர் சிறுத்தையிடம் சிக்கிய அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது.

நெதர்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு பிரான்சை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் கைகுழந்தைகளுடன் சென்றுள்ளனர்.

அப்பூங்காவின் சுற்றிப்பார்க்க வருபவர்கள் விலங்குகளை காரின் உள்ளே இருந்து பார்க்க வேண்டுமே தவிர, வெளியில் பார்ந்து பார்க்கக் கூடாது என்று அனைவரிடமும் பரிந்துரைக்கப்படும்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு பதிவெண் கொண்ட கார் ஒன்று பூங்காவின் குறிப்பிட்ட பகுதியில் நிறுத்தி.காரின் உள்ளே இருந்த குடும்பத்தினர் வெளியில் வந்து கையில் தங்கள் கைகுழந்தையுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

திடிரென்று, பூங்காவில் இருந்த இரண்டு சிறுத்தைகள் அவர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தது.

இதைக் கண்ட அவர்கள் உயிருக்கு பயந்து காரை நோக்கி வேகமாக ஓடினர்.இருப்பினும் சிறுத்தை தொடர்ந்து விரட்டியதால், அப்போது குழந்தை வைத்திருந்த பெண் மிரட்டிய பின்பு அந்த சிறுத்தை நின்றுள்ளது. அதன் பின் அவர்கள் உடனடியாக காரில் ஏறிச் சென்றுள்ளனர்.

இவ்வீடியோ காட்சி வேறு ஒரு காரில் இருந்த நபர் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.