கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை

1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்த பிறகு, தென் கொரியாவுக்குள் நுழையும் முதல் வட கொரிய தலைவராகியுள்ளார் கிம் ஜாங்-உன்.

ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை எப்போது ஆரம்பித்தது. 1948 முன்பு ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிந்தது?

நீண்ட மற்றும் சிக்கலான இந்த வரலாறு, இரண்டாம் உலகப் போரின் முடிவில் தொடங்கியது.

கொரியப் போர் எப்படி ஆரம்பமானது?

_101083844_2e221c73-a193-4c39-a582-754718843a6e  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101083844 2e221c73 a193 4c39 a582 754718843a6eகொரியப் போரின் போது வட கொரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தியது.

மேற்கு மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே நடந்த பனிப்போரின் நேரடி விளைவாக, 1950ல் கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தது.

ஒரே நாடாக இருந்த கொரியாவை, 1910 முதல் இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை ஜப்பான் ஆண்டது.

போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததை சிறந்த வாய்ப்பாகப் பார்த்த சோவியத் ஒன்றியம், கொரியாவுக்குள் நுழைந்தது.

1948-ம் ஆண்டு கொரியாவை பிரிக்க சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. சோவியத் ஒன்றியம் வட கொரியாவையும், அமெரிக்கா தென் கொரியாவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.

வட கொரியாவில் ஒரு கம்யூனிச சர்வாதிகாரத்தை நிறுவிய சோவியத் ஒன்றியம், முன்னாள் கொரில்லா படை வீரரான கிம் இல்-சூங்கிடம்(கிம் ஜாங்-உன்னின் தாத்தா) அதிகாரத்தை ஒப்படைத்தது.

_101083845_612cd9ee-699d-4301-b550-f1ebc331276a  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101083845 612cd9ee 699d 4301 b550 f1ebc331276a

ஜனநாயக தேர்தல் நடந்த தென் கொரியாவில், சைங்மேன் ரீ அந்நாட்டின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்.

சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் 1949 இல் கொரியாவை விட்டு வெளியேறியது. ஒரு வருடம் கழித்து, எதிர்பாராவிதமாக தென் கொரியா மீது கிம் இல்-சூங் தாக்குதல் நடத்தினார்.

ஒரு ஐக்கியப்பட்ட கம்யூனிச கொரியாவை உருவாக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது.

வட கொரியாவிடம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. இதற்கு அவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

தென்கொரியாவுக்கு உதவுவதற்காக அமெரிக்க படையும் வந்தது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 14 ஐ.நா நாடுகளிடம் இருந்தும் தென் கொரியாவுக்கு ஆதராக படைகள் வந்தது.

_101086188_6d3c5a03-e52c-4465-ab0a-2942ba6fa103  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101086188 6d3c5a03 e52c 4465 ab0a 2942ba6fa103

போரை நிறுத்த அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என அப்போதைய அதிபர் ட்வைட் ஐசனோவர் மிரட்டியதால் போர் நிறுத்த ஒப்பந்தம் 1953-ல் கையேழுத்தானது. அதே ஆண்டில் சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் மரணமும் போர் நிறுத்தத்திற்குப் பங்களித்தது.

இறுதி அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காக எட்டப்பட்ட இந்த உடன்படிக்கையால் அப்போது சண்டை ஓய்ந்தது.

ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை. அதனால்தான் இரண்டு கொரிய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு மிக முக்கியமானது.

இரண்டு நாடுகளும் எப்படி வேறுபடுகின்றன?

தென் கொரியாவிலும் வட கொரியாவிலும் தினசரி வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்க முடியாது.

மேற்குப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் கொரியா, முதலாளித்துவ தத்துவத்தை ஏற்றுக்கொண்டது.

ஆசியாவின் மிகச் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகத் தென் கொரியா வளர்ந்துள்ளது.

_101086189_4a69281b-572d-4848-a66c-dedf3807e996  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101086189 4a69281b 572d 4848 a66c dedf3807e996தென் கொரிய தலைநகர் சோல் 

1960களில் அரசால் ஊக்குவிக்கப்பட்ட தொழிற்துறையால், சாம்சங், ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு உருவாகின.

தென் கொரிய கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது. இவை தயாரித்த நாடகங்கள் மிகவும் பிரபலமாயின.

நாட்டின் 48 மில்லியன் மக்கள் தொகையில், 45 மில்லியன் மக்களுக்கு அதிக வேகமான வயர்லெஸ் இணையம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான பொருட்களும் மக்களுக்குக் கிடைக்கும்.

வட கொரியாவை பற்றி தென் கொரிய மக்களிடம் என்ன கற்பிக்கப்படுகிறது?

”வட கொரியா நமது முக்கிய எதிரி நாடு என்றும், அதே சமயம் நமது சக நாடு என்றும் எங்களுக்கு கற்பிக்கப்படுகிறது” என்கிறார் கொரிய யு டியூப் பதிவாளர் பில்லி.

_101086190_c6585343-481e-4dfe-b195-50910e68bfd9  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101086190 c6585343 481e 4dfe b195 50910e68bfd9வட கொரிய தலைநகர் பியாங்யாங்

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. ஆனால், முதலாளித்துவம் அந்நாட்டில் ஊடுருவி வருகிறது.

வட கொரியாவில் வாங்குவதற்குப் பொருட்கள் உள்ளன. ஆனால், அது பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலான வட கொரிய மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் உயர் தலைவரே நமக்கு முக்கியம் என அந்நாட்டு குடிமக்களுக்கு சிறுவயது முதலே கற்பிக்கப்படுகிறது. அத்துடன் தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மற்றும் மேற்குலக நாடுகளும் தீயவை என மக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

துஷ்பிரயோகங்கள்

சித்திரவதை,பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு மற்றும் பட்டினி என மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக 2014-ம் ஆண்டு வட கொரியாவை ஐ.நா குழு குற்றம் சாட்டியது.

இந்நாட்டின் உயர் தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் ஐ.நா பரிந்துரைத்தது.

கிம் வம்சம்

_101086191_c7f88d07-bc75-4f87-9739-bd798ddb973a  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101086191 c7f88d07 bc75 4f87 9739 bd798ddb973a1992ல் கிம் இரண்டாம் சங்

வட கொரியாவின் முதல் மற்றும் நீண்டகால தலைவராக இருந்தவர் கிம் இரண்டாம் சங். “தன்னுணர்வு” என்ற சுய நம்பிக்கை தத்துவத்தை அந்நாட்டிற்கு அவர் அறிமுகப்படுத்தினார்.

இடைவிடாத பிரசாரத்தின் மூலம், தன்னை சுற்றி தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டதினால், எதிரிகளே இல்லாமல் 46 ஆண்டுகள் ஆட்சி செய்தார் கிம் இரண்டாம் சங்.

அப்படி எதிரிகள் இருந்தால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த பாரம்பரியத்தை தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் கிம் ஜாங்-உன்னும் கடைபிடித்தார்.

கிம் இரண்டாம் சங், அவரது மகனான கிம் ஜாங்-இல்லை 1980களில் கொரிய தொழிலாளர்கள் கட்சி மற்றும் ராணுவத்தில் பெரிய பொறுப்புகளை அளித்து பதவி உயர்வு பெற செய்தார். இந்நிலையில், தலைவர் பதவியை கிம் ஜாங்-இல் எடுத்து கொள்வார் என தெரிய வந்தது.

1994 ஆம் ஆண்டு கிம் இரண்டாம் சங் உயிரிழந்த பிறகு, அவருக்கு “குடியரசின் நிரந்தர அதிபர்” என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும், அந்நாட்டின் கடவுள் போல அவர் கொண்டாடப்பட்டார்.

அவரை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த கிம் ஜாங்-இல், உலகின் முதல் பரம்பரை கம்யூனிச நாடாக வட கொரியாவை ஆக்கினார்.

இரட்டை வானவில் மற்றும் பிரகாசமான நட்சத்திரம் கிம் ஜாங்-இல் பிறப்பை குறிக்கும் என வட கொரிய மக்களுக்கு அதிகாரப்பூர்வ பிரசாரத்தில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள்

கிம் ஜாங்-இல்லின் ஆட்சியில் பொருளாதார நிலை மோசமடைந்து, அரசியல் எதிர்ப்பாளர்கள் அதிகமடைந்தனர்.

மேலும், அவர் நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை அதிகப்படுத்தினார். அவர் 2011ஆம் ஆண்டு உயிரிழந்த பிறகு கிம் ஜாங்-உன் ,இதனை தொடர்ந்தார்.

போருக்கு பின் தென் கொரியாவிற்கு சென்ற முதல் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்.

_101086193_81618892-7afe-43c1-91f1-7c8653ec44de  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101086193 81618892 7afe 43c1 91f1 7c8653ec44de

சமீப மாதங்களில் தென் கொரியாவுடன் அவர் வைத்துள்ள உறவுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐ.நா விதித்த அதிக பொருளாதார தடைகள்தான் என சிலர் குறிப்பிடுகின்றனர்.

அணு ஆயுதங்கள் வடிவமைப்பில் வல்லமை பெற்று விட்டதாக வட கொரியா கூறுகிறது. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்தது.

இந்த அறிவிப்பானது, கிம் அமெரிக்கா அதிபர் டிரம்பை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து வந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற இடமாக மாற்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் சேர்ந்து பணிபுரிய போவதாக அவர் கூறுகிறார்.

ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஆய்வாளர்கள் இது குறித்து சந்தேகிக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

_101086192_dabe4372-ab2c-4cda-9861-431289b630fb  கொரியப் பிரச்சனையின் வரலாறு: அ முதல் ஃ வரை 101086192 dabe4372 ab2c 4cda 9861 431289b630fb

அணுஆயுத சக்தி கொண்ட அமெரிக்கா, தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது, வட கொரியா முக்கிய பிரச்சனையாக கருதும்.

இரண்டாவது காரணம்: இதே போன்ற ஒப்பந்தங்கள் வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையே போடப்பட்டு, வட கொரியா அதனை மீறியவுடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

இந்த சந்திப்பை கொரியர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

சோலில் உள்ள யு டியூப் பதிவாளர் கொரியன் பில்லி கூறுகையில், “இருநாட்டு தலைவர்களும் அமைதி குறித்து பேசுவதை பார்க்கும் போது உணர்ச்சிகரமாக இருந்தது. ஏனெனில் வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே சுமூகமான உறவையே கொரியர்கள் எதிர்பார்த்தனர்” என்றார்.

“எதிர்காலத்தில் நான் வட கொரியாவுக்கு பயணம் செல்ல முடியும் என்ற அளவிற்கு கற்பனை செய்ய தொடங்கி விட்டேன். வட கொரியாவிற்கு சென்று அந்நாட்டு மக்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக தென் கொரியர்களுக்கு உண்டு”என்றார்.