ஏழெட்டு மனித மிருகங்களிடம் சிதைபடவா: ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாய்

குழந்­தை­க­ளுக்கே உரித்­தான கள்­ளங்­க­ப­ட­மற்ற அப்­பா­வித்­த­னமும் மகிழ்ச்­சியும் உயிர்ப்பும் நிறைந்த, ஆஷிஃ­பாவின் அகண்டு விரிந்த பட்டாம் பூச்சிக் கண்­களை மறக்­கவே முடி­ய­வில்லை.

அந்தக் குழந்­தைக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை பதை­ப­தைக்கச் செய்­கி­றது. இந்தக் கட்­டு­ரையை எழுதத் துவங்கும் போதே மன­தோடு விரல்­களும் நடுங்­கு­கின்­றன.

ஆஷிஃ­பா­வுக்கு என்ன நடந்­தது?

ஆஷிஃபா ஒரு பக்­கர்வால் பழங்­குடி இனத்தைச் சேர்ந்த குழந்தை. இந்து, முஸ்லிம் என எது­வு­ம­றி­யாத குழந்தை என்று அவ­ளது தந்தை கண்­ணீ­ரோடு சொன்­ன­துதான் சரி­யா­னது.

ஜம்­முவின் ரசானா கிரா­மத்தில் குதி­ரை­களை மேய்த்து வந்த குதி­ரைக்­குட்­டி­க­ளோடு இன்­னொரு குட்­டியாய் விளை­யாடித் திரிந்த ஒரு சின்­னஞ்­சிறு தேவதை.

அன்றும் தனது குதி­ரையைத் தேடித்தான் அந்த சின்­னஞ்­சிறு குழந்தை அலைந்து கொண்­டி­ருந்தாள். அதே ஊர்க் கோவிலில் பூசா­ரி­யாக இருக்கும் கொடூர மனம் படைத்த சஞ்­சய்ராம் மற்றும் அவ­னது கூட்­டா­ளி­களின் திட்டம் பற்­றி­யெல்லாம் அவ­ளுக்கு எதுவும் தெரிந்திருக்க­வில்லை.

அவர்கள் திட்­ட­மிட்­ட­படி, சஞ்­சய்­ராமின் உற­வி­ன­ரான 17 வயது பையன் அவளை காட்­டுக்குள் போய்­விட்ட குதி­ரையைக் கண்­டு­பி­டித்துத் தரு­வ­தாக கூறி அழைத் தான்.

கள்­ளங்­க­ப­ட­மற்ற குழந்தை குதி­ரையைத் தேடி அவன் பின்னால் சென்­றது. அவளை மயங்­க­வைத்து காட்­டி­லேயே அவன் பாலியல்வன்புணர்வு செய்­துள்ளான்.

பிறகு மயங்­கிய நிலை­யி­லேயே சஞ்­சய்­ராமின் கட்­டுப்­பாட்டில் உள்ள கோவி­லுக்கு கொண்டுவரப்­பட்டு ஒரு பூட்­டப்­பட்ட அறைக்குள் மேசை அடியில் மறைத்து வைக்­கப்­பட்டாள்.

சஞ்­சய்ராம் தனது குற்­றத்தை மறைக்க காவல்­து­றையில் பணி­பு­ரிந்த திலீப்பை நாடினான். அக்­கு­ழந்­தையை பாது­காக்க வேண்­டிய திலீப்பும் கய­வ­னாக மாறி அந்தப் பிஞ்சுக் குழந்­தையை பாலியல் வல்­லு­றவு செய்­துள்ளான்.

தொடர்ந்து அவ­னோடு காவல்­து­றையைச் சேர்ந்த சில நண்­பர்­களும் பாலியல் வன்­பு­ணர்­விலும் குற்­றத்தை மறைப்­ப­திலும் ஈடு­பட்­டுள்­ளனர். பிறகு மீரட்டில் இருக்கும் சஞ்­சய்­ராமின் மகன் இதற்­கா­கவே வர­வ­ழைக்­கப்­பட்­டுள்ளான்.

தொடர்ந்து ஒரு வாரம் மயக்­க­ம­ருந்து கொடுத்து கோவிலில் அணு அணு­வாக அந்தக் குழந்தை சிதைக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு வார சித்­தி­ர­வ­தைக்குப் பிறகு சஞ்­சய்ராம் அந்தக் குழந்­தையை கொல்ல வேண்­டிய நேரம் வந்­து­விட்­ட­தாக மற்­ற­வர்­க­ளிடம் சொல்­லி­யுள்ளான்.

அவர்கள் மயங்­கிய நிலை­யி­லேயே குழந்­தையை காட்­டுக்கு தூக்கிச் சென்­றனர். கொல்­வ­தற்கு முன்பு இன்­னொ­ரு­முறை அக்­கு­ழந்­தையை பாலியல் வல்­லு­றவு செய்ய விரும்­பு­வ­தாகச் சொல்­லிய திலீப், தனது காம­வெ­றிக்கு அக்­கு­ழந்­தையை இன்­னொ­ரு­முறை பலி­யிட்டான்.

பிறகு கழுத்தை நெரித்து அந்தக் குழந்­தையைக் கொல்ல முயன்றான். முடி­யாமல் போகவே அவள் ஆடை­யையே கயி­றாக்கி கழுத்தை நெரித்து 17 வயது பையன் கொலை செய்தான்.

அவள் செத்­து­விட்­டதை உறுதி செய்­து­கொள்ள இரண்டு முறை கல்லைத் தூக்கி அக்­கு­ழந்­தையின் தலையில் போட்­டுள்­ளனர். ஆஷிஃபா எனும் பட்­டாம்­பூச்சி ஒவ்­வொரு அங்­கமும் சிதைக்­கப்­பட்டு கொடூ­ர­மாகக் கொல்­லப்­பட்டாள்.

இந்தக் கொடூரம் நிகழ்ந்து கொண்­டி­ருந்த நாட்­களில் இன்­னொரு பக்கம் ஆஷிஃ­பாவின் அப்­பாவி ஏழைக் குடும்பம் காணாமல் போன குழந்தையைத் தேடி ஊரெங்கும் அலைந்­தது. அடுத்த நாளே காவல் நிலை­யத்­திலும் புகார் செய்­தனர். சஞ்­சய்­ராமின் கோவி­லுக்கும் வந்தனர்.

அந்தக் கோவி­லுக்­குள்தான் ஆஷிஃ­பாவை மயங்­கிய நிலையில் அடைத்து வைத்து சிதைத்துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், உறவினர் வீட்­டுக்குப் போயி­ருக்­கலாம் என்று கூசாமல் பொய் சொல்லி கோவில் வாச­லி­லேயே திருப்பி அனுப்­பி­விட்டான் சஞ்­சய்ராம். கோவி­லுக்குள் தவறு நடக்­காது என்று நம்­பிக்கை கொண்­டி­ருந்த அந்த ஏழைக் குடும்­பமும் கோவி­லுக்குள் சென்று தேடாமல் திரும்பிச் சென்­றது.

அந்த அப்­பாவி முஸ்லிம் ஒரு இந்­துக்­கோவில் மீது வைத்­தி­ருந்த நம்­பிக்கை, அந்தக் கோவிலில் தினமும் பூசை செய்­ப­வ­னுக்கு இல்லை. அவன் அந்தக் கோவிலை எவ்­வித குற்­ற­வு­ணர்­வு­மில்­லாமல் தனது கொடூரச் செய­லுக்குப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தான்.

காவல்­துறை விசா­ர­ணைக்கு வந்­தது. விசா­ர­ணைக்­கு­ழுவில் அந்தச் சிறு தளி ரைச் சிதைத்த குற்­ற­வா­ளி­களும் இடம் பெற்­றி­ருந்­த­துதான் கொடூ­ரத்தின் உச்சம்.

நிர்­பயா முதல் கொடூ­ர­மான பாலியல் வன்­பு­ணர்­வு­களை இந்த இந்­தியத் தேசம் கடந்து போய்க்­கொண்­டு­தானே இருக்­கி­றது. ஆஷிஃ­பாவும் அப்­படிக் கொடூ­ர­மாக சிதைக்­கப்­பட்ட இன்­னொரு பெண்­தானே? என்று தோன்­றலாம். ஆனால் ஆஷிஃபா விஷ­யத்தில் கொடூரம் இத்தோடு முடிந்­து­வி­ட­வில்லை.

இந்து ஏக்தா மஞ்ச் (பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்­பு­களில் ஒன்று) என்ற அமைப்பு இந்தக் கொடூரக் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்­யக்­கூ­டாது என்று ஜம்­முவில் போராட்டம் நடத்­தி­யது.

இதில் வழக்­க­றி­ஞர்­களும் அடக்கம். இதை­விடக் கொடுமை அந்தப் பிஞ்சுக் குழந்­தையை அணு அணு­வாக சிதைத்­த­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக அந்தப் போராட்­டத்தில் இந்­திய தேசத்தின் கௌரவச் சின்­ன­மான தேசி­யக்­கொடி பறந்­தது. தேசமே வெட்கித் தலை­கு­னிய வேண்­டிய விஷயம்.

அத்­தோடு முடிந்­து­வி­ட­வில்லை. பா.ஜ. கட்­சியைச் சார்ந்த இரண்டு மாநில அமைச்­சர்கள் இக்­கொடும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாக நடை­பெற்ற போராட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

கொன்­ற­வர்கள் இந்­துக்கள். ஆகவே தான் அவர்கள் பக் கம் நிற்­க­வேண்டும் என்று பா.ஜ.க.வின் சமூக வலைத்­த­ளப் ­போ­ரா­ளிகள் முழங்­கினர்.

நேர­டி­யா­கவே தன் அமைச்­சர்­களை அனுப்பி குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ரவு தந்­த­தோடு, தான் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் அரசின் செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களைப் பாது­காக்க முயன்­றது பா.ஜ.க. இதனால் மெக­பூபா முக்­தியின் காஷ்மீர் அரசு மௌனம் காத்­தது. பெண் குழந்­தைகள் பாது­காப்பு என்று மேடை­களில் முழங்கும் பிர­தமர் நரேந்­திர மோடி மௌனம் காத்தார்.

ஓர் அப்­பாவிச் சிறு­மியைத் தொடர்ச்­சி­யாகப் பல நாட்கள் கோவிலில் வைத்து பாலியல் வன்­பு­ணர்வு செய்து கொடூ­ர­மாகக் கொலை செய்த குற்­ற­வா­ளி­களும் அவரை ஆத­ரிக்கும் அமைப்­பு­களும் இந்து மதத்தை ஒரு கேட­ய­மாக முன்­னி­றுத்­தினர். இந்து மதத்­திற்கு இதை­வி­டவும் அவ­மா­ன­க­ர­மான ஒரு தருணம் வந்­து­விட முடி­ யாது.

இந்து மதம் உட்­பட எல்லா மதங்­களும் மக்­க­ளி­டையே அன்­பையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தை­யுமே போதி க்­கின்­றன. இந்­நி­லையில் இந்தச் சம்­ப­வத்தை இந்­து­மதம் ஏற்­றுக்­கொள்­ளுமா?

மனி­த­ராகப் பிறந்த யாராலும் மன்­னிக்­கவோ, ஆத­ரிக்­கவோ முடி­யுமா? ஆனால் எவ்­விதக் கூச்­சமும் இல்­லாமல் மக்­க­ளி­டையே மதத்தின் பெயரால் வெறுப்பை விதைக்கும் ஒரு கும்பல் ஒரு குழந்­தையை மதத்தின் பெயரால் பாலியல் வன்­பு­ணர்வு செய்து கொடூ­ர­மாகக் கொலை செய்­ததை ஆத­ரிக்கும் என்றால், அக்­கொடும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாகத் தேசி­யக்­கொ­டியை உயர்த்திப் பிடிக்கும் என்றால் இந்தத் தேசம் அதைப் பார்த்­துக்­கொண்டு மௌனித்துக் கிடக்­குமா?

நல்­ல­வே­ளை­யாக அப்­ப­டி­யெ­துவும் நிக­ழ­வில்லை. காஷ்மீர் மட்­டு­மல்ல தேசமே கொந்­த­ளித்துத் திரண்­டெ­ழுந்­தது. காங்­கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்­காந்தி விடுத்த அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்ட அழைப்பை ஏற்று நள்­ளி­ரவில் டெல்லி வீதியில் மக்கள் வெள்ளம் கரை புரண்­டது.

Untitled  ஏழெட்டு மனித மிருகங்களிடம் சிதைபடவா: ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாய் Untitledஅவர்கள் கையில் ஏந்­திய மெழு­கு­வர்த்தி ஆஷிஃ­பா­விற்­காகக் கரைந்து அழு­தது. இதன் தொடர்ச்­சி­யாக நாடெங்கும் போராட்­டங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­ றன.

ஜம்மு–காஷ்மீர் க்ரைம் பிராஞ்ச் சிறப்புப் புல­னாய்­வுக்­கு­ழுவின் ஒரே பெண் உறுப்­பி­ன­ரான ஸ்வேதாம்­பரி சர்மா குற்­ற­வா­ளி­களைக் கைது செய்­வதில் உறு­தி­யோடு நின்றார்.

தனது சக வழக்­க­றி­ஞர்கள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாக நின்று மிரட்­டி­ய­போதும் அஞ்­சாமல் தீபிகா ராஜ்வத் எனும் வீரப்­பெண்­மணி (வழக்­க­றிஞர்) ஆஷிஃ­பா­விற்­காக நியாயம் கேட்டு நீதி­மன்­றத்தில் நின்றார். இப்­பொ­ழுதும் குற்­ற­வா­ளிகள் தரப்­பினர் அவ­ருக்குக் கொலை மிரட்டல் விடுத்து வரு­கின்­றனர்.

இத­னி­டையே குற்­ற­வா­ளி­க­ளுக்கும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் எதி­ராக தேசமே திரண்­டெ­ழுந்­தது. அதில் பெரும்­பான்­மை­யினர் இந்­துக்கள் என்­பதைச் சொல்லத் தேவை­யில்லை.

இது­தானா நமது முன்­னோர்கள் கனவு கண்ட, நாம் வசிக்க விரும்­பு­கிற இந்­தியா? இல்லை! எனது பெயரால் #NotInmy Name (இந்­துவின் பெயரால்) இதைச் செய்­யாதே என்று மக்கள் வெகுண்­டெ­ழுந்­தனர். இந்த மக்கள் கொந்­த­ளிப்­பிற்குப் பிறகே பிர­தமர் மோடி, இந்­தி­யாவின் மக­ளுக்கு நீதி கிடைக்கும் என்றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த நான்கு ஆண்­டு­களில் நாடு முழு­வதும் நடந்த வன்­மு­றைகள், கல­வ­ரங்கள், கொலைகள், பாலியல் வன்­பு­ணர்வு உட்­பட பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள் அனைத்­திற்கும் இந்து மதமும் தேசப்­பற்றும் தேசி­யக்­கொ­டியும் தொடர்ந்து கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வது வெட்­கக்­கே­டா­னது.

மத்­திய அரசை, மதத்தின் பெயரால் நடக்கும் அத்­து­மீ­றலை விமர்­சிக்கும் அர­சியல் கட்­சிகள், அமைப்­புகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், தனி­ந­பர்கள் எல்­லோரும் தேச­வி­ரோ­தி­க­ளா­கவும் இந்­துக்­களின் விரோ­தி­க­ளா­கவும் சித்­த­ரிக்­கப்­பட்­டனர்.

ஆஷிஃபா விவ­கா­ரத்­திலும் அதுவே நடந்­தது. ஆனால் நல்லவேளை மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். உண்மையான தேசவிரோதிகளை இனம் கண்டு கொண்டு விட்டார்கள்.

பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், சிறுமிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கி யமல்ல. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே. அதேபோல குற்றவாளிகளும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் குற்றவாளிகளே.

ஆஷிஃபாவின் கள்ளங்கபடமற்ற ஒளி வீசும் கண்களின் முன் குற்றவுணர்வோடு இன்று நம் தேசம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. இனி இந்தத் தேசத்தில் ஒவ் வொரு பெண் குழந்தையும் ஆஷிஃபா தான். அவர்களையும் அவர்களது குழந்தை மையையும் காப்பாற்றுவதும், மதத்தின் பெயரால் கொடூரங்கள் நிகழாமல் தடுப் பதும்தான் ஆஷிஃபாவுக்கு இந்தத் தேசம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

(மேற்படி கண்ணீர் கட்டுரைக்குச் சொந்தக்காரிதான் பத்திரிகையாளினி ஜோதிமணி)

தகவல்: ஷண்