திருமணம் பற்றி அபர்ணதி எடுத்த அதிர்ச்சி முடிவு!

ஆர்யா பங்கேற்ற எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற கனவோடு பங்கேற்றவர் அபர்ணதி.

ஆனால் அவர் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் ஆர்யா இறுதியில் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டதால், பலரும் அவர் அபர்ணதி மீது உள்ள காதலால் தான் இப்படி கூறினார் என விமர்சித்தனர்.

இந்நிலையில் அபர்ணதி தற்போது அளித்துள்ள பேட்டியில் இனி திருமணம் செய்துகொள்ளபோவதில்லை என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

நான் கல்யாணம் பண்ணமாட்டேன். இன்னும் 40 அல்லது 50 வருடம் இருக்குற லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணுவேன். என்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவேண்டாம் என பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். எனக்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை, அதை தாண்டி எவ்ளோவோ இருக்கு. உலகத்தை சுத்த போறேன்” என கூறியுள்ளார்.