தொலைந்து போன வாழ்க்கை!

உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப்படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை சிறப்பு விலையில் star hotel களில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம்.

நாகரீகப் போர்வையில் எல்லோரும் இதே தவறைச் செய்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம், அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புழுக்கையை அள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம் வளர்த்ததெல்லாம் விற்காம வெட்ட திருவிழா வச்சோம்,

திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம். பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற மக்களின் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது !. நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.