கேரளாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு பத்திரிகை வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவால் மணமகன் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
இவை அத்தனைக்கும் காரணம் மணமகனின் பெயர். கோழிக்கோடு பகுதியை சேர்ந்த Vibheesh- Dhyanoorhanagithy ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு மே 21 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த பத்திரிகை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு, வாட்ஸ் அப்பிலும் பகிரப்பட்டது. இதில் மணமகளின் பெயரை பார்த்த பலரும் அந்த பெயருக்கு என்ன அர்த்தம் என கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
மேலும், பத்திரிகை அதிகமாக வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு, முன்பின் தெரியாத பலரும் மணமகனுக்கு போன் செய்து மணமகள் பெயரின் அர்த்தத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
என்னுடன் படித்த மாணவர் ஒருவர் எனக்கு போன் செய்து, இப்படி ஒரு பெயர் கொண்ட பெண்ணை எதற்காக திருமணம் செய்துகொண்டாய் என கேட்கிறான். இப்படி பல்வேறு நபர்களும் கேட்பதால் மிகுந்த மன வருத்தம் மற்றும் கோபத்திற்கு ஆளாகியுள்ளேன் என மணமகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மணமகன் பொலிசில் புகார் அளித்துள்ளார், எனக்கு போன் அழைப்பு எப்போதும் வந்துகொண்டிருக்கிறது, இதனால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.