காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக் கொட்டிலில் இருந்து திங்கட்கிழமை (14.05.2018) யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சகாயநாதன் விதுசனா (வயது 17) என பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடைசியாக இன்று காலை 8:30 மணி வரையில் தனது நண்பர்களுக்கு தனது கைப்பேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.