மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை வடக்கு மாகாண சபையின் தலைமையில் மேற்கொள்வதை நிராகரிப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களினதும் மக்களினதும் தலைமையின் கீழ் வடக்கு மாகாண சபையும் வட மாகாண முதலமைச்சரும் வரவேண்டும் எனவும் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பொது அமைப்புக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கலந்துரையாடலின் போது இறுதி தீர்வு எட்டபப்படாத நிலையில் மாணவர்களது நிலைப்பாடு தொடர்பாக வினவிய போதே யாழ் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமேனன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனினும் வட மாகாண சபையின் தலைமையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதியன்று வழமைப்போன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான ஒரு தருணத்திற்காகவே தென்னிலங்கை காத்திருந்ததாகவும் இன்றைய இந்ந சூழழைப் பார்த்து தென்னிலங்கை சிரிக்கும் நிலை உருவாகியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.