கேரள மாநிலத்தில் தனது 10 வயது மகளை தியேட்டருக்கு அழைத்து வந்து தொழில் அதிபருக்கு இரையாக்கிய தாய் மற்றும் தொழில் அதிபரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர்.
மகளிடம் தொழில் அதிபர் பாலியல் சேஷ்டைகள் செய்வதை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும் தாய் , தன்னையும் தொழில் அதிபருக்கு மகள் கண் முன்னே தாரை வார்ப்பது அசிங்கத்திலும் அசிங்கமாக தியேட்டரில் அரங்கேறியுள்ளது. இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் எடப்பல் பகுதியில் தனது மகளை அழைத்து கொண்டு தொழில் அதிபர் ஒருவருடன் ஒரு பெண் தியேட்டருக்குள் வருகின்றார்.
தொழில் அதிபர் நடுவில் அமர மகள் மற்றும் தாய் அவனுககு வலது இடது புறத்தில் அமருகின்றனர்.
சிறுது நேரம் 10 வயது மகளிடம் சேஷ்டைகள் செய்யும் அவன், சிறுது நேரம் தாயிடம் சேஷ்டைகளை செய்கின்றான் இப்படி நடுவில் அமர்ந்து கொண்டு தாயின் உதவியுடன் மகள் தாய் என மாறி மாறி திரையரங்கில் அசிங்கம் அரங்கேறுகின்றது.
தியேட்டர் கண்காணிப்பாளர் இதை தற்செயலாக சிசிடிவி காட்சியில் பார்த்து அதிர்ந்து போய் அந்த சிசிடிவி வீடியோவை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி வழங்கியுள்ளார்.
குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் காவல் நிலையத்தில் இதை காண்பித்து அந்த தொழில் அதிபர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.
ஆனால் பேபி என்ற லோகல் எஸ் ஐ தொழில் அதிபருக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. நேற்று இந்த இந்த சிசிடிவி காட்சிகள் கேரள ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்தே தற்போது இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து நேற்று தான் அந்த பெண் மற்றும் தொழில் அதிபரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர்.
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத எஸ் ஐ பேபி யை உடனடியாக சஸ்பெண்ட் செய்து காவல் துறை தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த தொழில் அதிபரின் இடத்தில் தான் இந்த பெண் குடியிருப்பதாகவும் அவர்கள் தியேட்டருக்கு வரும் போது விலை உயர்ந்த காரில் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அந்த தொழில் அதிபர் பெயர் மைதீன் குட்டி எனவும் அவன் பாலக்காடு திரித்தலா பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.
வசதியான தனது கள்ளக்காதலனுக்கு தனது 10 வயது மகளை இறையாக்கிய தாயை சமூக வலைதளங்களில் பலர் காரி துப்பி வருகின்றனர்.
பெற்ற தாயிடமே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வேதனையிலும் வேதனை!
பொது இடமான தியேட்டரிலேயே சிறுமிக்கு இந்த அளவிற்கு நடந்துள்ளபோது வீட்டில் என்ன மாறியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பார் என்பது குறித்து போலிசார் அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் யாரும் புகார் அளிக்க வராத நிலையில் தியேட்டர் உரிமையார் இதை வெளியே சொல்வதால் தியேட்டருக்கு கெட்ட பெயர் ஏற்படும் அதனால் தியேட்டருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையெல்லாம் பொறுட்படுத்தாமல் இது போன்ற ஈன செயல் புரிபவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரே முன் வந்து இந்த காணொளியை கொடுத்து புகார் அளித்துள்ளார்.
தியேட்டர் உரிமையாளரின் இந்த செயல் பாராட்டதக்கது. நமக்கு ஏன் வம்பு நம்ம தியேட்டருக்கு தான் கெட்ட பேரு வரும் என அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவம் வெளியே வந்திருக்காது.