பல தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் 2020 ஜனாதிபதிபத்தேர்தல் – பொதுபலசேனா

நாட்டில் தற்போதுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான நெருக்கடிகளுக்கான தீர்வை எதிர்வரும் 2020 ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே பெற்றுக் கொடுக்கும்  என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் மற்றும் சமூக ரீதியில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடனே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தேசிய  அரசாங்கத்தின் சில அடிமட்டக் குறைப்பாடுகள் காரணமாக அவர்களின் கொள்கைத் திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேசிய அரசாங்கத்தின் மீது விரக்தி கொண்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் இலங்கை வாழ் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருத்தல் வேண்டும். இந் நிலையில் தற்போது நாட்டு  மக்களின் ஏகோபித்த ஆதரவு கூட்டு எதிரணியினருக்கே உள்ளது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு  இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பொது எதிரணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்சவை போட்டியிட வைப்பது தொடர்பில் தற்போது கட்சியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இந் நிலையில் கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் நாட்டை மீண்டும் ஒருமைப்படுத்தும் அரசியல் தகுதியும் அவருக்கே உண்டு என்றார்.