யாழ். தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நல்லிரவு பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர், குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
இதன்போது தாலிக்கொடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பவுண் நகைகளும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணம், பெறுமதியாக கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.