வட கொரியாவின் அணுகுண்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

வடகொரியா வசம் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பிரமிக்கத்தக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் லிட்டில் பாய், பேட்மேன் அணுகுண்டை விட 10 மடங்கு வலிமையான குண்டுகளை வட கொரியா வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மலையையே நகர்த்தும் அளவுக்கு இந்த அணுகுண்டுக்கு ஆற்றல் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனுக்கான வடகொரிய தூதராக இருந்த தே யங் ஹோ என்பவர் இதைத் தெரிவித்ததாக தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர்.

இதற்கிடையில் வரும் 22ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் அணு ஆயுத சோதனை மையத்தை முற்றிலும் கலைக்கப்போவதாகவும் வடகொரியா கூறியிருந்தது.

இதனால் வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் முற்றிலும் என நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணுஆயுதங்களை வடகொரியா முற்றிலும் கைவிடாது என்ற தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.