மிஸ் இத்தாலி இறுதிப் போட்டிக்கு இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.
இத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை பெண் ஒருவரே இந்த போட்டியில் தெரிவாகியுள்ளார்.
மிஸ் இத்தாலி போட்டிக்கு முன்னர் இடம்பெறும் மாகாண மட்ட போட்டியில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இத்தாலி நாட்டின் 28 பெண்களுடன் போட்டியிட்டு இந்த பட்டத்தை வென்றுள்ளார்.
பாதுவா நகரில் தனது பெற்றோருடன் வாழும் செவ்மி தாரகா பெர்னாண்டோ என்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு பட்டத்தை வென்றுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி பாதுவா நகரின் கம்போஸம்பிரியோ பிரதேசத்தில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய மிஸ் இத்தாலி போட்டிக்கு இலங்கை பெண் தகுதி பெற்றுள்ளார்.