பேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை: சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் சில அப்பிளிக்கேஷன்கள் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான அப்பிளிக்கேஷன்கள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் விசாரணையை மேற்கொண்டிருந்தது.

இதன்போது பயனர்களின் அனுமதி இன்றியும் அவர்களின் தகவல்களை பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.