பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.
பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.