கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 120 தொகுதிகளில் முன்னிலை பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது.
தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை தாண்டி 120 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், மஜத 43 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இனி பெரிய அளவில் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் வர வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அக்கட்சியின் சார்பில் முன்னள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.