நினைத்த வேலை கிடைக்க வேண்டுமா?…

நம் எல்லோருக்கும் நிறைய கனவுகளும் ஆசைகளும் இருக்கும். நினைச்ச வேலை கிடைக்கனும் கை நிறைய சம்பாதிக்கனும் சந்தோஷமாக வாழனும் என்ற நிறைய எண்ணங்கள் இருக்கும். நீங்கள் என்ன தான் நிறைய படிச்சு இருந்தாலும் சில சமயங்களில் மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்காமல் திண்டாடுவீர்கள்.

வாழ்க்கையில் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல நமது இலட்சியமும் மிகவும் அவசியமானது. நிறைய சம்பாதிச்சு எதிர்காலத்தில் வளமுடன் வாழ வேலை மிகவும் அத்தியாவசியமானதும் கூட. அதுவே நாம் கனவு கண்ட வேலையையே நமக்கு கிடைத்து விட்டால் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அப்படி நாம் விரும்பும் வேலையை அடைய சனி பகவானை நாம் திருப்திபடுத்த வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை அளிக்கும் ஜோதிட முறைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

ஹனுமான் வழிபாடு

வேதகால ஜோதிட முறைப்படி அனுமான் வழிபாடும் நமது லட்சியத்தை அடைய உதவி புரிகிறது. ஏனெனில் இவர் சனி பகவானையே ஆளக் கூடிய நபர். அதனால் தான் அனுமான் பக்தர்களுக்கு சனி பகவான் நன்மைகளை அள்ளித் தருவார் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் தொடர்ந்து அனுமானை வழிபட்டு வந்தால் சனி பகவானின் அனுக்கிரகமும் பெற்று வேலையில் வெற்றி வாகை சூட முடியும்.

சனி மந்திரம்

சனி பகவானின் அருளையும் அனுக்கிரகத்தையும் பெற சனி மந்திரம் மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் இந்த மந்திரத்தை 19000 தடவை 40 நாட்கள் என்ற முறையில் மனசார செபித்து வந்தால் நீங்கள் விரும்பிய வேலை உங்கள் கையில் இருக்கும்.

மந்திரம்

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ – என்னும் இந்த மந்திரத்தை 108 முறை காலையும் மாலையும் சொல்லுங்கள்.

தானம்

சனி பகவானின் அருளை பெற அவருக்கு பிடித்தமான கருப்பு எருமை அல்லது கருப்பு எள்ளு இவற்றை தானமாக கொடுக்கலாம். இதன் மூலம் அரசாங்க வேலை கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களை தடைகளை தகர்த்தெறிந்து அரசாங்க வேலையில் அமர இயலும்.

விரதம்

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கே உரித்தான நாள். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டு வந்தால் உங்கள் இலட்சியத்தை எளிதாக அடையலாம்.

14 ருத்திராட்சம்

14 முகம் கொண்ட ருத்திராட்சை மாலை அணியலாம். ருத்திராட்சை கடவுள் சிவபெருமானின் அங்கமாக கருதப்படுகிறது. இதன் மூலம் சனி பகவானின் எல்லையில்லா ஆற்றலை பெற்று வேலையில் வலிமை பெற்று வெற்றி அடையலாம்.

நீலக்கல்

நீலக்கல் என்பது ஒரு விலையுயர்ந்த ரத்தினக் கல் ஆகும். இது சனிபகவானின் எல்லா அனுக்கிரகங்களையும் அனுகூலத்தையும் கிரகித்து தருகிறது. இதை நாம் அணிந்து கொண்டால் வேலையில் திறம்பட செயல்பட்டு வெற்றியை உங்கள் வசமாக்கலாம்.