பிறந்த நாள் கொண்டாடுவது என்பது, தற்போது மெழுகுவத்திகளை அணைத்து, கேக் வெட்டுவது என்பது போல் ஒரு பொதுவான நியதி ஆகிவிட்டது.
கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்டுவரும் ஒரு காட்சி இது. கொஞ்சம்கூட மாறவில்லை.
ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கொண்டாடுபவர் மாறுவார். அவரின் புத்தாடை மாறியிருக்கும். ஆனால் இந்த கேக் வெட்டுவது மட்டும் மாறாது.
இங்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் போது, தீடீர் என்று தீ பற்றி எரிந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில், இளம் பெண் ஒருவர் மீது தீ முழுமையாக பரவியுள்ளது. இதனால், முழு குடும்பமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
அது மட்டும் இல்லை, இவ்வாறான கொண்டாட்டங்களின் போது எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் தீடீர் ஆபத்துக்கள் ஏற்படும் என்பது மட்டும் உண்மை.