வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார்.
மலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியர்கள் தொடர்ந்து வட மாகாணத்திற்கு செல்வதனால் மலேசியா மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விசேடமாக கர்ப்பிணி தாய்மார் காய்ச்சலில் பாதிக்கப்படும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கு வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேரியா நோய் முழுமையாக இலங்கையில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், நோயை பரப்பும் எனோபிலஸ் என்ற நுளம்பை இன்னமும் முழுமையாக நாட்டை விட்டு ஒழிக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேரியா நோய் தொற்றுடைய நபர் ஒருவர் வருகைத்தந்தால், அவரது உடம்பில் உள்ள ப்லேஷ்மோடியம் வைவெக்ஸ் (Plasmodium vivax) என்ற மலேரிய நோயை பரப்பும் நுளம்பு ஊடாக வேறு ஒருவரின் உடலுக்குள் செல்ல கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.