யாழ்பாணம் கோப்பாய் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று இரவு 8:20 மணியளவில் நடந்துள்ளது.
கோப்பாய் வீதியில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளில் ஈடுபட்ட போது, மோட்டார்சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பெண்களை பொலிசார் சோதனையிட்டனர்.
அந்த பெண்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஒட்டிவந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குறித்த பெண்களை கைது செய்த கோப்பாய் பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.