இலங்கையில் 47,000 தொழில்கோரும் பட்டதாரிகள் இருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.
அரச நிர்வாக பணிகளில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றது.
இதில் உரையாற்றியபோதே மேற்கண்ட தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அரச சேவையில் இணைந்து கொள்ள 47,000 பட்டதாரிகள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையில் தம்மை இணைத்துக்கொள்ளுமாறு கோரி, நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 விண்ணப்பங்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் அரச சேவையின் அளவை அரசாங்கம் குறைத்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
எனினும் கடந்த மூன்று வருடங்களில் 20,000 பேரை அரசாங்கம் அரச சேவைக்குள் உள்ளீர்த்துள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.