விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் அரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம் “காளி”. இப்படத்தில் வரும் “அரும்பே” என்ற பாடல் இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.
அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது, ‘காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது.
சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.
என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ்நிலையில் வளர்ந்த பெண்.
பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.
“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.
தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
காளி படத்தின் முதல் 7 நிமிட வீடியோவை வெளியிட்ட விஜய் ஆண்டனி
உதயநிதிஸ்டாலினின் மனைவி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, அம்ரிதா ஐயர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காளி.
ஆக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி மருத்துவராக நடித்துள்ளார்.
இப்படத்தில் பரத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி அமெரிக்காவில் தன்னுடைய பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. இதய சிகிச்சை மருத்துவர்களில் விஜய் ஆண்டனியும் சிறந்த மருத்துவராம்.
தொடர்ந்து அவரது கனவில் காளை மாடு, குழந்தையை முட்ட வருவதும், ஒரு அம்மா ஓடி வருவதும், நாக பாம்பு வருவதும் தான் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கும் தனது கடந்த காலத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற யோசிக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் தனது அம்மாவிற்கு மாரடைப்பு வர, அப்போது அவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது.
அதனால், உடனே தான் கொடுக்க தயாராக இருப்பதை கூறும் போது, தான் அவரது மகன் இல்லை என்பதை விஜய் ஆண்டனிதெரிந்து கொள்கிறார். இதை வைத்து பின்னிப் பிணைந்துள்ள கதை தான் காளி.
வரும் 18ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் 7 நிமிட காட்சியை வீடியோவாக வெளியிட்டு புரோமோஷன் செய்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து, நாசர், ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயபிரகாஷ், மதுசூதனன் ராவ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.