இந்த 6 கதவில் ஒன்றை செலக்ட் செய்யுங்க! உங்க ஆழ்மன ஆசை என்னனு நாங்க சொல்றோம்!

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.. ஒவ்வொரு விஷயங்கள் பிடிக்கும்.. இதனை வைத்து உங்களது வாழ்க்கை எப்படிப்பட்டது.. உங்களது மனம் எத்தகையது என்பது போன்ற உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது… நீங்கள் இந்த கதவுகளின் படங்களை பார்க்கும் போது உங்களது மனதை கவர்ந்த கதவு எது என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது..

கதவு எண் 01

உங்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.. நீங்கள் சொந்தமாக முடிவு எடுத்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள். சுய சிந்தனை நீங்கள் சுய சிந்தனையாளராக இருப்பீர்கள்.. நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் நேசித்து வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

கதவு எண் 02

உங்களது வாழ்க்கையில் உங்களுக்கென ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடியவர்கள். அந்த பாதையில் நீங்கள் நன்றாகவும் பயணம் செய்து கொண்டிருப்பீர்கள்.. உங்களுக்கு தனியாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் வாழ்க்கையில் தனியாக பயணிக்க விரும்புவீர்கள். புதுமை உங்களது வாழ்க்கை பாதையில் நீங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். புதுமையாக யோசிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

கதவு எண் 03

இந்த உலகத்தில் வாழ்வதை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள். இந்த உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உங்களது மனதில் இருக்கும். உங்களது வாழ்க்கை முழுக்க பயணமாகவே தான் இருக்கும்.. உங்களது பயணங்களுக்கு ஒரு முடிவே கிடையாது என்று கூறலாம். உற்சாக விரும்பிகள் நீங்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பீர்கள். நண்பர்களை வீட்டிற்கு அழைப்பது உங்களுக்கு பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும்.

கதவு எண் 04

உற்சாகமான வாழ்க்கை பாதை என்றால் மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கு குழப்பம் மற்றும் கணிக்க முடியாத சூழ்நிலைகள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். உங்களுக்கு இதுவரை தெரியாத நபர்களிடம் கூட நட்பாக பேசக் கூடிய மனம் கொண்டவர்கள்.. புதிய விஷயங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். விதிமுறைகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் நடக்க கூடியவர்களாகவும் இருப்பீர்கள். கட்டுப்பாடு விதிப்பது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.. சுய சிந்தனை உங்களுக்கு சுயமாக செயல்படுவது தான் மிகவும் பிடிக்கும்.. நீங்கள் த்ரில் ஆன அனுபவங்களை மிகவும் விரும்புவீர்கள்..

கதவு எண் 05

நீங்கள் மிகவும் அமைதியான பாதைகளை விரும்புவராக இருப்பீர்கள்.. அமைதியான சூழலை விரும்பும் ஒரு நபராக இருப்பீர்கள்.. நீங்கள் உங்களை குறைந்த அளவே கவனித்துக் கொள்ள கூடியவராக இருப்பீர்கள். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். பாராட்டுகளை பெறுவீர்கள் நீங்கள் சில சமயங்களில் மிகவும் எளிமையான விஷயங்களை தான் தேர்ந்தெடுப்பீர்கள்.

கதவு எண் 06

நீங்கள் அமைதியான வாழ்க்கை பாதையை அனுபவிக்க நினைக்கும் ஒரு நபராக இருப்பீர்கள். நீங்கள் பல மணி நேரங்களை தனிமையிலேயே அனுபவிக்க நினைப்பீர்கள். ஆனால் நாம் தனிமையில் தான் இருக்கிறோம் என்பதை உணராத ஒரு நபராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு பல ஆசைகள் இருக்கும்.. உங்களை சுற்றி இருப்பனவற்றில் உங்களது மனதை கவர்ந்த பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.அதே போல அந்த பொருட்களை அடைந்து விடுவீர்கள். நீங்கள் உண்மையான உறவுகளை அதிகமாக மதித்து நடக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.