விலை உயர்ந்த அழகு சாதனங்கள், பயன்படுத்தி தான் அழகு பெற முடியுமா…? என்ன உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் போதும் நீங்களும் அழகாக ஜொலிக்கலாம்.
கொய்யா இலை உங்கள் சருமத்தில், நமைச்சல், ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் ஒரு நிவாரணி. சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தும். கொய்யா இலையை அரைத்து சரும பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைக்கு உண்டு. கொய்யா இலையை மிக்சியில் அரைத்து, அதனுடன் சிறுது தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடமும். இதனை தினமும் தூங்க செல்லும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாக, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முகம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். இதற்கு கொய்யா இலையை பயன்படுத்தி டல் அடிக்கும் உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்க முடியும். கொய்யா இலையை அரைத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் அது முக துவாரங்களில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்தி உங்களை பளிச்சிட வைக்கும்.
- கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும். உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி இளமை பாதுகாக்கப்படும்.
- பொடுகு பிரச்சனையால் அவதி பட்டு வருபவர்கள், கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
- எண்ணெய் சருமம் கொண்டவர்கள், கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.