எரிபொருள் விலையை கண்டித்து வவுனியாவின் நகர பகுதிகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“அநீதியான முறையில் விலை உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைத்துவிடு” என வாகசம் தாங்கிய தமிழ், சிங்கள சுவரொட்டிகள் காணப்படுகின்றன.
அரசாங்கத்தினால் எரிபொருட்களுக்கு விலையேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.