எடையை வேகமாக குறைக்கணுமா? தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க!

பலருக்கும் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கடுப்பை உண்டாக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், செய்தாக தான் வேண்டும். இல்லாவிட்டால், அக்கொழுப்புக்களே பல நோய்கள் வர காரணமாகிவிடும். தினமும் காலையில இதுல ஒரு டம்ளர் குடிச்சா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்! எனவே ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் இக்காலத்தில் தொப்பையும் பலருக்கு இருப்பதால், அதனையும் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க… இங்கு உடல் எடையையும், தொப்பையையும் வேகமாக கரைக்க இரவில் பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

உடல் எடையையும், தொப்பையையும் வேகமாக கரைக்க இரவில் பின்பற்ற வேண்டியவைகள்!

க்ரீன் டீ க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக கரைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ பருகினால், இரவு முழுவதும் உடலின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்து, கலோரிகளை இரவு முழுவதும் எரிக்கும். இப்படி தினமும் இரவில் செய்தால், உடல் எடை வேகமாக குறையும்.

மிளகு ஆய்வுகளிலும் உடலில் உள்ள கொழுப்புக்களை மிளகு வேகமாக கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இரவு உணவில் மிளகை அதிகம் சேர்த்து உட்கொள்ள, இரவு முழுவதும் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.