வாழ்கையில் கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமானால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்……

ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் கஷ்டமான நிலைகள் தான் துரதிர்ஷடம் என்று கூறுகின்றோம்.அப்படி ஒருவருக்கு ஏற்படும் துரதிர்ஷடமானது. அவர்களின் வாழ்வில் கடுமையான வறுமையையும், கஷ்டங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது.ஆனால், துரதிர்ஷடம் நாம் செய்யக் கூடிய ஒருசில தவறான செயல்கள் மூலம் தான் ஏற்படுகிறது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.துரதிர்ஷடம் வராமல் இருக்க செய்யக் கூடாத செயல்கள் சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொடக் கூடாது. ஏனெனில், அதை தொட்டால் நம்மை நோக்கி எதிர்மறை ஆற்றல்கள் ஈர்ப்பதோடு, நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே துரதிர்ஷ்டமாக நடக்கும்.

நாம் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களை தரையில் சிதற விடக் கூடாது. ஏனெனில் சிதறி இருக்கும் உணவுகளை நாம் கால்களில் மிதித்து விட்டால், அது மிகப்பெரிய பாவச் செயலாகும். இதனால், நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்துக் கொள்ளும்.நாம் ஒரு சுப காரியத்தில் ஈடுபடும் போது, ஏதேனும் ஒரு நாய் வந்து நம்மை தீண்டி விட்டால், அது ஒரு கெட்ட சகுணமாக கருதப்படுகிறது.எனவே, இந்த செயலானது, நமது வாழ்வில் வறுமையை ஏற்படுத்துகிறது.வீட்டைப் பெருக்கி, துடைக்கும் போது, அந்த அழுக்கு நீர் நமது மேல் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்நீர் நம் உடலில் பட்டால், அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.நாம் ஒரு இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வரும் போது, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தவறாமல் குளித்துவிட வேண்டும்.ஏனெனில், அது அவரது வீட்டிற்கு முடிவற்ற துர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில் உள்ள மரக்கட்டைகளைத் தொடுவதும் ஒரு அபசகுணமான செயலாகும். ஏனெனில், நாம் இதைச் செய்யும் போது, அதில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை ஈர்த்து, நமது வாழ்வில் அதிக தோல்விகளை ஏற்படுத்தும்.