ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியால் மகிழ்ச்சியில் பௌத்த சாசனம்…!

மகா சங்கத்தினருக்கும், பௌத்த சாசனத்திற்கும்  நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் அவர்களின் ஆசிகளுடனேயே தாமதமின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

இதற்காக பல செயற்திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்திலும் அச்செயற்திட்டங்களை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயத்தை ஜனாதிபதி நேற்று(17-05-2018) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பௌத்த மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார்.