அந்த புகைப்படங்கள் மிக தெளிவானவையாக காணப்படுகின்றன. தோற்கடிக்க முடியாதவர் என கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் உடலிற்கு அருகில் படையினர் அருகில் நின்றுகொண்டிருக்கின்றனர்.
அவ்வேளை யுத்தம் முடிவிற்கு வந்ததற்காக வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ஜனாதிபதி நிலத்தை விழுந்து வணங்குகின்றார்.
அந்த யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்,காயமடைந்தனர்.
ஆனால்; அரசாங்கத்தின் வெற்றி பாரிய சட்டமீறல்களிற்கு மத்தியிலேயே பெறப்பட்டது, யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் மீறல்களில் ஈடுபட்டனர்.
மோதல்களின் போது விடுதலைப்புலிகள் படுகொலைகள், அரசியல் கொலைகள்,தற்கொலை குண்டுதாக்குதல்கள் போன்றவற்றில் பரவலாக ஈடுபட்டனர்.சிறுவர்களை பரந்துபபட்ட அளவில் பயன்படுத்தியதுடன் கைதிகளை சுட்டுக்கொன்றனர்.
இலங்கை இராணுவத்தினர் பெருமளவானவர்களை சட்டத்திற்கு புறம்பான விதத்தில் தடுத்து வைத்தனர், சட்டவிரோத படுகொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற துஸ்பிரயோகங்கள் அதிர்ச்சிதரக்கூடியனவாக காணப்படுகின்றன.விடுதலைப்புலிகளால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்கள் மீது படையினர் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டனர்.
படையினர் தங்களால் கைதிகளால் பிடிக்கப்பட்டவர்களை சுட்டுக்கொல்வதையும், அவர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பி;ன்னர் படுகொலை செய்யப்பட்ட பெண் போராளிகளின் உடல்களிற்கு அருகில் சிரித்தபடி நிற்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவற்றை படையினர் தங்கள் வெற்றிக்கேடயமாக பதிவு செய்திருந்தனர்.
யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களின் பின்னர் நீதிக்கான தேடல்கள் தொடர்கின்றன- பதில்கள்-கண்ணிற்கு புலப்படாமலேயே உள்ளன.
விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதி வாரங்களில் கொல்லப்பட்டுவிட்டனர்,இதன் காரணமாக அவர்களால் இழைக்கப்ட்ட அநீதிக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள் என எவரும் இல்லை.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்கபோராளிகளிற்கு தங்கள் வீடுகளிற்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் விடைகளை கோரி வீதிகளில் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல்போன அனைவரும் இறந்து விட்டனர் என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ள போதிலும் அவர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்கின்றனர்.
2015 இல் பாதிக்கப்பட்டவர்களின் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுநீதிக்கால பொறிமுறைகளை அமைப்பதற்கு இணங்கியது.
இந்த விடயங்களில் முன்னேற்றம் என்பது மிகவும் மந்தகதியிலானதாக காணப்படுகின்ற போதிலும் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளது.
பதில்கள், பொறுப்புக்கூறுதல்,மற்றும் நஸ்டஈடு கிடைப்பதை உறுதிசெய்வதே தற்போதைய இலக்காக அமையவேண்டும்.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களை பொறுத்தவரை அவர்கள் மிக நீண்ட காலமாக காத்திருந்து விட்டனர்.
தேஜ்ரி தபா
தமிழில் ரஜீபன்