இராணுவ சிலைக்கு மக்கள் செய்த காரியம்!

முல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு நபரொருவர் செருப்பை கழற்றி எறுந்தமையால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.

இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நிலப்பரப்புக்குள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் நடைபெற்று வருகின்றது. பெருமளவான மக்கள் அங்கு சென்ற கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையிலேயே முல்லைத்தீவை சேர்ந்த நபரொருவர் மேற்படி இராணுவத்தின் வெற்றி சின்னத்துக்கு செருப்புக்களை கழற்றி எறிந்துள்ளார். இதனால் சற்று நேரம் அங்கு பதற்றம் நிலவியது.