தமிழ் இளைஞர்களை கடத்தும் சிங்கள பெண்! – காணொளி

இலங்கையில் நபர்களை கடத்தும் மர்மநபர்கள் தொடர்பான காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவர்களை கண்டுபிடிக்க மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

திருகோணமலையில் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று 25 லட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் இரண்டு ஆண்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை மஹாமாயாபுர பகுதியை சேர்ந்த தோனி என அழைக்கப்படும் இனோகா நில்மினி, அவரது காதலன் மற்றுமொரு நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் பற்றிய தகவல் அறிந்தால், அது குறித்து 026 -2222222/3 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகரின் 071- 8591174 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குதாறு கோரப்பட்டுள்ளது.