இஞ்சிதேநீர் ஒரு புத்துணர்வூட்டும் பானமாகும்.அதை விட இஞ்சியில் மக்னீசியம்,விட்டமின் சி மற்றும் பிற கனிமங்களும் காணப்படுகின்றன. இதை தயாரிக்கும் போது சிறிதளவு தேனும், எலுமிச்சைச் சாறும் கலந்து குடித்தல் சிறப்பாகும்.இவ் இஞ்சியின் பயன்கள் பின்வருமாறு:
இது ஒரு வாந்தியை தடுக்கும் பானம்
அதாவது இஞ்சியை நீண்ட தூர போக்குவரத்திற்கு முன் இஞ்சி தேநீர் குடிப்பதனால் குமட்டல் போன்றவை தவிர்க்கப்படும் என்பதனால் போக்குவரத்தின் போது இதை எடுத்துக்கொள்ளலாம்.இரப்பை தொழிற்பாட்டைக் கட்டுப்படுத்தும்.
இது செறிமானப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்மந்தமான சமிபாட்டுப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும்.
வீக்கம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும்
அதாவது தசை வீக்கம் போன்றவற்றைக் குறைக்கும் அத்துடன் மூட்டுக்களில் உள்ள வலியையும் குறைக்கிறது.
சுவாசப் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்சில சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து புத்துணர்வு பெற உதவும் .மற்றும் சூழல் ஒவ்வாமையை எதிர்த்து சுமூகமான தீர்வைத் தரும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இஞ்சி தேநீரில் உள்ள விட்டமின் தாதுக்கள், அமினோ அமிலங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் தடுக்கின்றது.மாதவிடாய் கோளாறிற்கு தீர்வு கொடுக்கும்
இது மாதவிடாயை சீராக்குவது மட்டுமல்லாமல் வயிற்று வலியையும் குறைக்க உதவும். இஞ்சித் தேநீருடன் சேர்த்து சிறிது தேனும் கலந்து குடிப்பது சிறப்பான பலனைத் தரும்.
நோயெதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது மேலும் மன அழுத்த நிவாரணியாகவும் தொழிற்படுகிறது எனவே இஞ்சியை தினசரி பயன்படுத்துவதனால் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.