முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் அது மிகையாகாது.
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு,கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் இன்றாகும்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
இன்று பலரும் மடிந்து போன உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவாக “ஆறாத அனல் சுட்ட காயம்” என்ற பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.