நடிகைகளுக்கு இப்போது சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது பெரிய விஷயம். இதற்காக பல நாயகிகளும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த நேரத்தில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான 18.05.2009 படத்தில் நடித்த நாயகி தான்யாவிற்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் தான்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளார். இதேவேளை லண்டனிலும் இசைப் பிரியாவின் குடும்பத்தார் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்கள். படத்தை நிறுத்தவேண்டும் என்று கோரி இவர்களோடு இணைந்து செய்யல்படும் அடாவடிக் கும்பல் ஒன்று, சிங்கள புலனாய்வோடு இணைந்து இந்த படத்தை லண்டனில் காண்பிப்பதை நிறுத்த பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது.
இத்திரைப்படம் சனிக் கிழமை(19) மாலை 4.00 மணிக்கு ஹரோ சபாரி சினிமாவில் மற்றும் ஞாயிறு(20) மதியம் 12.00 மணிக்கும் காண்பிக்கப்பட உள்ளது. ஈழத்து மக்களின் ஆதரவோடு. லண்டன் தமிழர்கள் நிச்சயம் இந்த தடையை உடைப்பார்கள். சிங்களத்திற்கு அடி பணிய மாட்டார்கள்.