“கோயில் திருவிழாக்களில் சிலபேர் வேடிக்கைகாட்டி பிழைப்பு நடத்துவதுபோன்று”.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் “எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார்” எனப்பேசி ஒரு சிறு நாடகம் நடத்தி ஐந்தே ஐந்து நிமிடங்களில்.. 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட (??) கிழவி ஒருவரின் பிழைப்பு தந்திரம்!!
வீடியோவை பாருங்கள்…
கிழவி பேசும் இந்தப்பேச்சை மனப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுத்தவர்கள் “தம்பி பிரபாகரன்”எனக்கூறுவதற்கு பதிலாக “அண்ணன் பிரபாகரன்” என எழுதிக்கொடுத்துள்ளார்கள்.
எப்படி இந்தக் கிழவிக்கு பிரபாகரன் அண்ணனாக இருக்க முடியும்??
(இங்கு நிற்பவர்கள் இருவரும் கிழவியுடன் நாடகம்போட வந்தவர்கள். இதில் நிற்பவர்தான் 20ஆயிரம் ரூபாய் காசை கிழவிக்கு கொடுத்தவர். இருவரின் மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது எப்படிப்பட்ட சுத்துமாத்துக் பேர்வழிகள் என்பது…)
இந்தக் கிழவிக்கு 20 ஆயிரம் ரூபாய் காசுகொடுத்தவர்… உண்மையில் கிழவியோடு நாடகம்போட வந்தவர்.
அவர் ஒருதொகை காசை கிழவிக்கு கொடுப்பதுபோல் காட்டினால், பார்த்துக்கொண்டு நிற்கும் மற்றவா்களும் (முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர்கள்) இரக்கம் காட்டி காசுகொடுப்பார்கள் என்பதுதான் இந்தப்பிழைப்பின் சூட்சமம்.
இந்த நிகழ்வுக்கு கட்டாயம் வெளிநாட்டுலிருந்து தமிழர்கள் வந்திருப்பார்கள் (இழிச்சவாயன்கள்)என்பது இப்படி பிழைப்பு நடத்தும் கூட்டத்துக்கு நன்றாக தெரியும்.
அவர்களிடம் எப்படியொல்லாம் கதைத்தால் பணம் பறிக்கலாம் என்பதை நாட்டில் உள்ளவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துபோகின்ற ஒவ்வொருவரும் இந்தமாதிரியான ஏமாற்றுக் பேர்வழிகளிடம் பணத்தை இழந்த கதைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு.
நீண்ட நாட்கள் இந்தமாதிரியான பிழைப்பு நடக்கப்போவதில்லை என நம்புகின்றோம். ஏன்எனில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் ஆயுட்காலங்கள் கடைசிக்காலத்தை அண்மித்துவிட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள்.