தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படத்தை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதனையடுத்து சந்தோஷ் பி ஜெயக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனை தாக்கி பேசியிருந்தார். அந்த பேட்டியில் என்னை திட்டுறீங்க சரி, சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பஞ்சாயத்து பண்ண உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது? போலீஸ், நீதிமன்றம் இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் சந்தோஷ் பி ஜெயக்குமாருக்கு நேரடியாக சவால் விட்டுள்ளார். வாங்க தம்பி நீங்களும் நானும் ஒன்றாக பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்லலாம். யாரை குறை சொல்றாங்கனு பார்க்கலாம்.
ஒரே ஒருத்தர் என்னை குறை சொல்லட்டும், என் மேலயும் என் நிகழ்ச்சி மேலயும் தவறு இருந்தால் செருப்பால அடிக்கட்டும். அதோட நான் தமிழ் நாட்டை விட்டே போறேன். திரும்பவும் வர மாட்டேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.