ஒரு வாரத்தில் கருவளையங்களை போக்க!

கண்களின் தோல் உடலின் மிக மென்மையாக பகுதிகளில் ஒன்று. அதிக நேரம் உறங்காமலிருத்தல்,அதிக கணனிப்பாவனை,மன அழுத்தம் போன்றவற்றால் கருவளையம் உருவாகும்.அவற்றை செயற்கை பொருட்களை கொண்டு அகற்றி விட முடியும் ஆனால் இவை பல பக்கவிளைவை ஏற்படுத்தும்.

பின்வரும் இயற்கை கொருட்களை உபயோகித்து விரைவில் உங்கள் கருவளையத்தை அழித்திடுங்கள்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் நம் உடம்பை கருவளையங்களுக்கு எதிராக போராட உதவுகிறது, இது ஒரு உயர் நீர் உள்ளடக்கம் கொண்ட ஒரு சிறந்த அழகை கூட்டும் உணவாகும். இது இரத்த நாளங்களின் நெகிழ்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரு வளையங்களை நீக்க உதவுகிறது இது விட்டமின்கள் ஏஇ சிஇ ஈஇ மற்றும் கே இணைந்திருப்பதால் உடலிற்கு நன்மை பயற்கும். சல்பர், கொலாஜன், சிலிக்கா போன்றவற்ளை கொண்டிருக்கிறது இதனால் கருவளையங்களுக்கு எதிராக தொழிற்படும்.

தர்பூசணி

தர்பூசணி ஒரு உயர் நீர் உள்ளடக்கம் கொண்டது. கிட்டத்தட்ட 92வீதம் நீரடக்கம் கொண்டது. இது எங்கள் உடலில் நீர் விகிதத்தை சமப்படுத்த உதவுகிறது. பீட்டா கரோட்டின், லிகோபீன், பைபர், விட்டமின் பி 1 மற்றும் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நம் கண் சுகாதாரத்தை அதிகரிக்கின்றன.

தக்காளி

தக்காளி சக்தி வாய்ந்த ஒக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது, இது கண்களின் கீழ் மென்மையான இரத்த நாளங்களைப் பாதுகாப்பதில் உதவுகிறது மேலும் சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. லாகோபீன், லுடீன், பீட்டா கரோட்டின், க்வெர்கெடின் மற்றும் விட்டமின் சி ஆகியவற்றினால் கருவளையத்திலிருந்து விடுபட வழி வகுக்கிறது.

எள்ளு

இது கருவளையம் வராமல் தடுப்பதற்கு ஓர் அற்புதமான பொருள் இதில் அதிகளவான விட்டமின் ஈ உள்ளதால்.கருவளையம் வராமல் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கருப்பு திராட்சை வத்தல்

கருப்பு திராட்சை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக எங்கள் கண்களின் நரம்பு தொழிற்பாட்டை கூட்டுகிறது இது திசுக்களுக்கு அதிக ஒக்ஸிஜனை அளிப்பதனால் புத்துணர்வாக இருக்கும். திகசரி சிறிதளவு உண்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருவளையம் நீங்கும்