டெல்லியில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியிடம் 34 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக தோல்வி அடைந்தது.ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போதைய நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கொல்கத்தா மும்பை பெங்களூர் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப் வாய்ப்பு இல்லாதஇ புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணி சீசனின் 52வது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியுடன் இன்று மோதியது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் மற்றும் ஹர்ஷா படேல் ஆட்டமிழக்காமல் தலா 36 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது. .. அம்பதி ராயுடு மீண்டும் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார்.
இந்த சீசனில் அதிரடி ஆட்டங்கள் மூலம் திரில் வெற்றிகளை பெற்று வந்த அனுபவமுள்ள சிஎஸ்கே அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியிடம் மிகவும் மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது. இதனால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது.