மதிப்பிழந்த உயிர்த் தியா­கங்கள்: “மீண்டும் நாட்டைப் பாது­காக்க ஒன்றாக திர­ளுங்கள்”…!

விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தில்  கைச்­சத்­திட்ட போது நாட்டை சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­ப­தற்­காக போரிட்டு வெற்றி வாகை  சூடினோம் . இதற்­காக செய்த உயிர்த் தியா­கங்கள் இன்று  காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே மீண்டும் நாட்டைப் பாது­காக்க  ஒன்­றி­ணைய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தெரி­வித்­துள்ளார்.

போர் முடி­வ­டைந்து 9 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் வெளி­யிட்­டுள்ள விஷேட அறிக்­கை­யி­லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக நான் பதவி ஏற்ற போது அதற்கு முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்கம் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. மறு­புறம் எமது உள்­நாட்டு பிரச்­சி­னைக்­காக சர்­வ­தேச தலை­யீ­டு­களும் மேலோங்கி இருந்­தன. எமது கடற்­ப­ரப்பில் மூன்றில் இரண்டு பகு­தி­யையும் நிலப்­ப­ரப்பில் மூன்றில் ஒன்­று­மாக பயங்­க­ர­வா­திகள் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தனர்.

உலகில் மிகவும் ஆபத்­தான கடல் மற்றும் விமானப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். அந்த பயங்­க­ர­வாத அமைப்­புக்கு எதி­ராக உலகில் வேறு எந்­த­வொரு நாட்­டுக்கும் இல்­லாத தைரி­யத்­துடன் போரிட்டோம். இந்தப் போராட்­டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வலுச் சேர்த்­தனர். இந்தப் போரில்­முப்­ப­டை­யினர் , பொலிஸார் மற்றும் சிவில் பாது­காப்பு பிரி­வினர் என பல்­லா­யிரம் பேர் உயிர்த்­தி­யாகம் செய்­தனர். இன்னும் பலர் அங்­க­வீ­ன­மாக்­கப்­பட்­டனர்.

விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு முழு­மை­யாக அழிக்­கப்­பட்­டதன் பின்­னரே வடக்கு மற்றும் கிழக்­கிற்கு ஜன­நா­யகம் கிடைத்­தது. மேலும் நெடுஞ்­சா­லைகள் , வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் பாட­சா­லைகள் என அனைத்து இடங்­க­ளிலும் மரண ஓலங்­க­ளின்றி சமா­தானச் சூழல் தென்­னி­லங்­கையைப் போன்று வடக்கு கிழக்­கிற்கும் அதன் பின்­னரே கிடைக்­கப்­பெற்­றது.

நாட்டு மக்­களின் சுதந்­திரம் வாழும் உரி­மையை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக உயிர்த் தியாகம் செய்த அனை­வரும் உயர்ந்த மானி­டர்­க­ளாவர். அவ்­வாறு அன்று இறுதிக் கட்டப் போரில் நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­திற்­காக பாடு­பட்ட இரா­ணு­வத்­தினர் போர்க் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டார்கள் எனக் குற்றம் சாட்­டு­கின்­றனர். இதை­விட மோச­மான செயல் யாதெனில் மக்­களின் வாக்­கு­களால் வந்த அர­சாங்­கமும் அதனை ஏற்றுக் கொண்­டுள்­ளமை மிகவும் மோச­மான காட்டிக் கொடுப்­பாகும்.

நாட்­டுக்கு எதி­ராக துரோ­கத்­தனம் செய்­ப­வர்­களும் இரா­ணு­வத்­தி­னரைக் காட்­டிக்­கொ­டுப்­ப­வர்­களும் ஒரு விட­யத்தை தெளி­வாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த தெரிவித்தார்.