நகம் கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கலாம். எப்போதாவது மனக்கவலை ஏற்படும் போது நகம் கடிப்பது ஒரு சிலர். ஆனால் எப்போதும் நகத்தை தேடித் தேடி கடிப்பது சிலருக்கு பழக்கமாகவே இருக்கிறது.
நகத்தொற்று
அதாவது இதனால் நகத்தொற்றுக்குள்ளாகலாம். நீங்கள் நகத்தை கடிப்பதனால் அருகிலுள்ள தசைகளில் தாக்கம் ஏற்படலாம் மேலும் அவை சிவந்து வலியை தரக்கூடியதாக காணப்படும்.
அழர்ச்சி
இது அழர்ச்சியை தூண்டும் ஒரு காரணியாகும் நகத்தில் உள்ள அழுக்குகள் படிந்து அழர்ச்சியை ஏற்படுத்தும்
பொதுவாக சிறு பிள்ளைகளிற்கு நகத்தை வெட்டாமல் விட்டால் அவர்கள் விளையாடும் பொழுது நகங்களின் இடுக்குகளில் சேரும் அழுக்குகள், கிருமிகள் வயிற்றில் சென்று வயிற்று வலி, வாந்தி, ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
அடிக்கடி நகம் கடிக்கும் போது சமிபாடடையாத உணவுத் துகள்கள் குடல் வால் பகுதியில் சேர்ந்துவிடும். இதனால் அப்பன்டிசைட் எனப்படும் குடல்வால் பிரச்னை வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இரத்தக்கசிவு
எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
பற்பிரச்சனை
தொடர்ந்து பற்களால் நகங்களைக் கடிக்கும்போது அது பற்களின் எனாமலை பாதித்துவிடும். பற்களில் பக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை ஏற்படும்.
நோய் நிலமை
நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா, இ.கோலி, போன்ற பக்டீரியாக்கள் விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது அவை வாய்வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு.
எனவே நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிறுத்துவதன் மூலம் பல தீங்குகளிலிருந்து தப்பிக்கலாம்.