சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்!

அழகு என்பதை ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம்.அழகற்றவறாய் இருந்தால் அவரை நல்ல குணம் கொண்டவர்கள் இல்லை எனவும் சிலர் நினைப்பதுண்டு. அழகு என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய விடயமாகி விட்டது. அந்த அழகை பாதுகாப்பதில் நாம் நமது சருமத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் முதலில் கவனிக்க வேண்டும்.
பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் மற்றும் எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.
கொத்தமல்லித் தழையையும் புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சை கலந்து முகத்தில் தடவினால் எண்ணெய் வழிகிற சருமம் அழகு பெறுவதுடன் மன அழுத்தமும் சரியாகும்.
பாலாடை அல்லது தயிருடன் தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.

Beauty Tips Tamil,

பாதாமும் மற்றும் ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால் சருமம் பளபளப்பு பெறும். நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.
தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தவிர்க்கலாம். மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து எண்ணெய் வடியாமல் இருப்பதுடன் என்றும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.