சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திவேகப் பாதையில் பயணிக்கும் சாரதிகள் தமது வாகனங்களை மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக அதிவேகப் பாதையில் ஏற்படும் விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.