கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை மாலை 3 வரை அமுலில் இருக்கும் என கட்டடம் ஆராய்ச்சி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மலைகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் திடீரென நிலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம், மரங்கள் விழுதல், மின்சார தூண்களில் மின்சார கசிவு போன்ற ஆபத்துக்கள் இருப்பின் உடனடியாக அவ்விடத்தை விட்டு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.