சுடுநீரில் கிராம்பு: கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கிராம்பு – 5

தண்ணீர் – 1 கப்

செய்முறை
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஐந்து கிராம்பையும் சேர்த்து மீண்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

நன்மைகள்
கிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதை குடிப்பதால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சிகள் கிடைக்கிறது.

சோம்பலை நீக்கி, சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க, காலையில் 1 கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ரத்தோட்டத்தை சீராக்கி, பல்வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல்வலி உள்ளவர்கள், மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீயை குடிக்கலாம்.