இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் அந்த நபர்கள் யார்? – நாமல்

படைவீரர்களை தண்டிப்பதற்கு தேவையான சாட்சியங்களை இந்த அசராங்கம் வழங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

சர்வதேசத்திற்கு எது தேவையோ அதனையே ராஜித சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.

சர்வதேச அரங்கில் நாட்டையும், மக்களையும், படைவீரர்களையும் காட்டிக் கொடுக்கத் தேவையான சாட்சியங்களையே அரசாங்கம் வழங்கி வருகின்றது.

பாருங்கள் மங்கள சமரவீர என்ன செய்கின்றார் என்று,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிரான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றார்.

அவருக்கு இப்போழுது என்ன பிரச்சினை? கோதபாய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எஞ்சியிருக்கும் ஒன்றரை ஆண்டையும் கொண்டு செல்ல இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என நாமல் ராஜபக்ச மிகவும் கடும் தொனியில் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.