மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.குறித்த மண்சரிவு நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட்டிருந்தது.
புஸ்ஸல்லாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து குறித்த நிலைமையை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்.
எனினும் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழையுடன் பனிமூட்டமும் காணப்படுகின்ற நிலையில் வாகன சாரதிகளை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.