பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்ற!

என்ன தான் நீங்கள் ஒரு நாளைக்கு பலமுறை பற்களைத் துலக்கினாலும், பற்கள் மஞ்சளாகவே உள்ளதா? அப்படியெனில் நீங்கள் பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் சரியில்லை என்று சொல்வீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தான் இச்செயலைச் செய்கின்றன. எனவே பற்களில் மஞ்சள் கறைகள் படியாமல் இருக்க வேண்டுமானால், சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரிக்கலாம்.
இல்லாவிட்டால், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒருசில உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும் தண்ணீரால் வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் அந்த உணவுத்துகள்கள் வாயில் உள்ள பாக்டீரியாவுடன் சேர்ந்து பற்களை சொத்தையாக்குவதைத் தடுக்கலாம்.
சரி,. இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்ற,pattakalil erukum maansal karai poga
பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் உள்ள அசிட்டிக் தன்மையால், அவற்றை உட்கொண்டால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளைப் போக்கலாம். அதிலும் குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால், பற்களின் வெண்மை அதிகரிக்கும்.
வாழைப்பழத் தோல்
வாழைப்பழத்தின் தோலில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்க வல்லவை. எனவே உங்கள் பற்களை வெண்மையாக்க, வாழைப்பழத்தை சாப்பிடுவதோடு, அதன் தோலைக் கொண்டு பற்களை மசாஜ் செய்யுங்கள்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலில் டி-லிமோனேன் என்னும் பொருள் வளமாக நிறைந்துள்ளது. இந்த பொருள் பற்களில் ஏற்பட்ட எப்பேற்பட்ட கறைகளையும் போக்க வல்லது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்வது தான். இப்படி செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
துளசி
துளசியை தினமும் சிறிது வாயில் போட்டு மென்று வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் உள்ள கறைகளும் அகலும்.
அன்னாச
ி புளிப்பு சுவைக் கொண்ட அன்னாசி பழத்தில் உள்ள புரோமிலைன், பற்களில் உள்ள கறைகளை நீக்கும். எனவே உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால், அடிக்கடி அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள்.
ஆப்பிள்
பச்சை ஆப்பிளில் மாலிக் ஆசிட் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும். எனவே சிவப்பு ஆப்பிளை உட்கொள்வதை விட, பச்சை நிற ஆப்பிளை சாப்பிட்டால், பற்களை வெண்மையாகும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பற்களைத் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி மாதம் ஒருமுறை பற்களைத் துலக்கினால், பற்களில் கறைகளை தங்குவதைத் தடுக்கலாம்