முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளின் குடியுரிமையை கொண்டுள்ள கோத்தபாய, அமெரிக்க குடியுரிமையிலிருந்து விலகிக் கொள்ளும் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் தேசிய சட்டத்தின் கீழுள்ள சில சிறப்பு விதிகளின் கீழ் கோத்தபாயவின் குடியுரிமையை நீக்க முடியாது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கமைய சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தத்தின் கீழ் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக உறுதி செய்ய வேண்டிய நிலையில், அதற்கு முன்னரே தனது பிரச்சார நடவடிக்கைகளை வியத்மக அமைப்பினால் ஆரம்பித்துள்ளார்.